வெகு நாட்களாய் தன்னை பார்க்க
விரும்பிய
தாத்தாவிடம் கேட்க கேள்வி ஏதும் இல்லை
அந்த பெயரனுக்கு!!!!
மேகத்தில் யானை தேடியும், சதுரங்க
காய்களை கலைத்தும்,
தன் பள்ளி நண்பர்களை பற்றி விவரித்தும்,
முழுநரை தாடியை பிடித்திழுத்தும்
பல் செட்டை கழற்றி போட சொல்லியும்
விளையாடிவிட்டு, வீட்டிற்கு போவதற்காய்
தந்தையின் கை பிடித்து
காப்பகத்திலிருந்து
வெளிவரும் போது கேட்டான்,
“நீங்களும் பெருசானா இங்க தான் இருப்பீங்களா????” என்று!!!!!!

