“எப்பயும் இவ்வளோ நேரம் தூங்கினது இல்லை.
ஆனா இந்த முறை ரொம்ப நேரமா தூங்கிட்டு இருக்கற மாதிரி இருக்கு. கடைசியா ஞாபகம்
இருக்கறது பைக்ல போகறபோது கீழ விழுந்தது. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுனே தெரியாது.
முழுசா இருட்டா தான் இருந்துச்சி. அப்போ அப்போ கொஞ்சம் வெளிச்சம் வந்ததும், தண்ணி
குடுத்ததும் ஞாபகம் இருக்கு.
திடீர்னு யாரோ என்னை அறுக்க ஆரம்பிச்சாங்க.
அறுத்ததுக்கு அப்புறம் ஒரு தண்ணில முக்கி வச்சிட்டாங்க.. திரும்ப வெளிச்சத்துக்கு
கொண்டு வந்ததப்போ ஊசியால தைக்க ஆரம்பிச்சாங்க. மறுபடியும் இருட்டு.
திரும்பவும் அப்போ அப்போ வெளிச்சமும்,
தண்ணியும் தந்தாங்க. ரொம்ப நேரத்துக்கு பிறகு பழைய மாதிரியே ஆகிட்டேன். இருட்டும்
வெளிச்சமும் எப்பயும் போல வந்து போக ஆரம்பிச்சது.”
அந்த கண்
மணிக்கு தெரியாது, தான் தானம் செய்யப்பட்டு ஒரு இரண்டு வயது குழந்தையின் பார்வையை
திரும்ப பெற செய்திருக்கிறோம் என்று.
LET SOMEONE SEE THROUGH YOUR EYES, WHAT YOU HAVE SEEN!!
BE AN ORGAN DONOR, ALL IT COSTS IS
LITTLE LOVE.
உறுப்பு
தானத்தை ஊக்குவியுங்கள்!!!


Super Inba, even I too want to donate my organs
ReplyDelete